வந்த முதல் நாளே கன்ஃபெக்சன் ரூம்.. அலறிய போட்டியாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று தான் தொடங்கிய நிலையில், முதல் நாளே தன்னை கன்ஃபெக்சன் அறைக்கு அழைத்து பேசுங்கள் என்று போட்டியாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், அவர்களில் ஒருவராக விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் உள்ளார் என்பதும், அவர் முதல் நாளே சில பிரச்சனைகளை எழுப்பினார் என்பதும் நேற்றைய எபிசோடை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
குறிப்பாக, பெண்கள் தங்கும் இடம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் கூறிய நிலையில், அது வாக்குவாதமாக மாறியது. இதனை அடுத்து, ஜாக்குலின் தனியாக தன்னை கன்பெஷன் அறைக்கு அழைத்து பேசுங்கள் என பிக் பாஸ் இடம் வேண்டுகோள் செய்துள்ளார்.
"ரூம் பிரச்சனை குறித்து அனைவரிடமும் எடுத்து சொல்லுங்கள், எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு, எல்லோரையும் கஷ்டப்படுத்தி விட்டதாக நான் நினைக்கிறேன், இருப்பினும், எனக்கு சரியாக தெரியவில்லை, யாரோ நமக்கு எதிராக ஒரு முடிவை எடுத்து விட்டார்களோ என்று எனக்கு தோன்றி கொண்டே இருக்கிறது. எல்லோரிடமும் ரூம் பிரச்சனை குறித்து பேசுங்கள், என்னையும் கன்ஃபெக்சன் அறைக்கு அழைத்து பேசுங்கள்’ என்று கூறியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vantha first day vae confession room
— Sekar 𝕏 (@itzSekar) October 6, 2024
Jacqueline 👌🏻#BiggBossTamil8 #BiggBossTamil#BiggBossTamilSeason8 pic.twitter.com/35dV7ttZha
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments