ஜாக்குலின் நடித்து வரும் 'தேன்மொழி' சீரியல் நடிகர் காலமானார்: விஜய் டிவி இரங்கல்

கலக்கப்போவது யாரு உள்பட ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவருமான ஜாக்குலின் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’தேன்மொழி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஜாக்குலின் தந்தையாக சுப்பையா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் குட்டி ரமேஷ். இவர் பல தொலைக்காட்சி சீரியல்களிலும், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து உள்ள நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று திடீரென காலமானார். இவரது மறைவிற்கு விஜய் டிவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக சின்னத்திரை, பெரியதிரை பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சின்னத்திரை கலைஞர் உயிரிழந்திருப்பது திரையுலகினர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
 

More News

அரசியலை தூக்கி எறிந்து விட்டு கலைப்பயணத்தை தொடருங்கள்: கமலுக்கு அட்வைஸ் செய்த இயக்குனர்!

அரசியலை தூக்கி எறிந்துவிட்டு கலைப் பயணத்தை தொடருங்கள் என கமல்ஹாசனுக்கு தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் டுவிட்டரில் அட்வைஸ் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வேற லெவல் கிளாமரில் 'சித்தி 2' சீரியல் நடிகை: வைரல் புகைப்படங்கள்!

ராதிகா நடித்த 'சித்தி' சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 'சித்தி 2' சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில்

தனியார் ஆம்புலன்ஸ்-களுக்கு கட்டணம் இவ்வளவுதான்....! தமிழக அரசு அறிவிப்பு...!

சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்சுகளுக்கான, கட்டணத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஸ்புட்னிக் வி எப்போது கிடைக்கும்? அதிகாரப்பூர்வத் தகவல்!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக் வி

சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த வாட்ச்மேன்… முதல்வர் செய்த நெகிழ்ச்சி செயல்!

சென்னையில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் வாட்ச்மேன் ஒருவர் தனது ஒரு மாதச் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாகக் கருதி முதல்வரின்