ஜாக்குலின் உளறலால் ஒட்டுமொத்த பெண்கள் டீமுக்கு ஆப்பு.. ரவீந்திரன் எடுத்த அதிரடி முடிவு..!

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், ஆண்கள் டீம் மற்றும் பெண்கள் டீம் என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இருவருக்கும் சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, தங்களுடைய வேலைகளை முடித்துக் கொள்ளலாம் என்றும் பிக் பாஸ் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், ஆண்கள் டீம், தங்களிடம் உப்பு இல்லை, நீங்கள் உப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டனர். அதற்கு பவித்ரா, அவங்க உள்ள வருவதற்கு அனுமதி கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள் அல்லவா? அப்போது உப்பு கொடுத்தால் உள்ளே விட வேண்டும் என்று சொல்லலாம்’ என ஐடியா கொடுத்தார். ஆனால், அந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்ளாமல், ஜாக்குலின், எங்களுக்கு உப்பு கொடுக்க விருப்பமில்லை. எங்களுக்கு சாப்பாடு இல்லை என்றாலும் பரவாயில்லை, என்று கூறினார்.

உடனே அதிரடியாக, ரவீந்தர், பெண்கள் டீம் பக்கம் உள்ள கிராசரீஸ் எல்லாத்தையும் எடுத்து நம்ம பக்கம் வைத்து பூட்டி விடுங்கள், என்று கூறியதால், ஜாக்குலின் உள்பட பெண்கள் டீம் அதிர்ந்துவிட்டனர். உப்பு கொடுக்க விருப்பமில்லை, என்று சொன்னால், ஆண்கள் டீம் பதறுவார்கள் என்று ஜாக்குலின் எதிர்பார்த்த நிலையில், ஆண்கள் டீம் அதிரடி முடிவெடுத்ததால் பெண்கள் டீம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மொத்தத்தில் ஜாக்குலின் உளறலால் ஒட்டுமொத்த பெண்கள் டீமுக்கு சாப்பாடு பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, பெண்கள் டீம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர், அதற்கு ஆண்கள் டீம் என்ன பதிலடி கொடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.