நீ முடிவு பண்ண தேவையில்லை.. ஜாக்குலின் - பவித்ரா பயங்கர மோதல்.. என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முதல் நாளே பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரண்டாவது நாளில் மிகப்பெரிய சண்டை வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சீசனில், பிக் பாஸ் போட்டியாளர்கள் கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருந்தனர். ஒரு வாரம் கழித்து, சின்ன சின்ன சண்டைகள் ஆரம்பமாகி, 50 நாட்களுக்கு பிறகு தினந்தோறும் பல சண்டைகள் வந்தன என்பது நாம் பார்த்ததுதான்.

ஆனால், இந்த சீசனில் எல்லோருமே சண்டைக்கு தயாராகி வந்தது போல தெரிகிறது. 'ஆண்கள் வீட்டில் செல்ல வேண்டிய பெண் யார்?' என்பது குறித்த விவாதம் நடந்த நிலையில் ஜாக்குலின் தன்னை அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்த்தார், ஆனால் சுனிதா உள்பட அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பவித்ரா போகட்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு ஜாக்லின் எதிர்ப்பு தெரிவித்தார். பவித்ராவை அனுப்பினால் ஆண்கள் பாவப்படுவார்கள் என்று கூறினார்.

ஜாக்லின் எதிர்ப்பு காரணமாக ஓட்டு போட்டு தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது, இது பவித்ராவுக்கு பிடிக்காததால் வாக்குவாதம் நடைபெற்றது. இதற்கு முன்னாடி நான் தானே போக வேண்டும் என்று எல்லோரும் சொன்னீங்க. அப்புறம் எதுக்கு ஓட்டு போட்டீங்க? நான் போக கூடாதுன்னு சில பேர் நினைக்கிறதால் தான் ஓட்டு போடுறீங்க என்று பவித்ரா கூறினார்.

இதனால் ஜாக்குலின் மற்றும் பவித்ரா இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் கடைசியில் பவித்ரா அழுதுகொண்டே அந்த இடத்தை விட்டு சென்றார். இரண்டாவது நாளே பெண்கள் தரப்பில் சண்டை ஏற்பட்டதை பார்க்கும்போது, ஆண்கள் தரப்பு எவ்வளவோ பரவாயில்லை என பிக் பாஸ் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.