வொர்க் அவுட் மீது தீராகாதல் கொண்ட 90 வயது பெண்மணி… அசத்தும் வீடியோ!
- IndiaGlitz, [Thursday,June 17 2021]
வொர்க் அவுட், உடற்பயிற்சி ஏன் நடைபயிற்சி மீதுகூட நம்மில் பலருக்கு நாட்டம் இருப்பதில்லை. ஆனால் ஜப்பானை சேர்ந்த 90 வயது மூதாட்டி டாக்கிஷிமா மீகா என்பவர் ஜிம் பயிற்சியாளராக இருந்து வருகிறார். கூடவே ஒரு நாளைக்கு மணிக்கணக்கில் வொர்க் அவுட் மற்றும் நடைபயிற்சியை செய்து வருகிறார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
மீகாவுக்கு தனது 60 வயது வரையிலும் வொர்க் அவுட்டில் எல்லாம் நாட்டம் இல்லையாம். ஆனால் “குண்டாக இருக்கிறாய்“ எனத் தனது கணவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு ஜிம் பக்கம் சென்றிருக்கிறார். அதனால் தனது எடையை 15 கிலோ அளவிற்கு குறைத்து இருக்கிறார். ஆனால் வொர்க் அவுட், உடற்பயிற்சிகளின் மீது தீராகாதல் வந்துவிட்டதால் தொடர்ந்து ஜிம்மிலேயே தனது நேரத்தை செலவிட்டு இருக்கிறார். இதனால் ஒரு தேர்ந்த ஜிம் பயிற்சியாளராகத் தற்போது ஜொலித்து வருகிறார்.
79 வயதில் ஜிம்மிற்கு சென்ற மீகா 87 வயதில்தான் பயிற்சியாளராக மாறி இருகிறார். மேலும் மீகாவிற்கு அனைத்துப் பயிற்சிகளும் அத்துப்படியாம். தற்போது 90 வயதை எட்டிவிட்ட போதிலும் அவர் ஒரு 60 வயது பெண்மணி போலவே சுறுசுறுப்பாகக் காட்சியளிக்கிறார். இதனால் ஜிம்மிற்கு வரும் நபர்களுக்கு இவர் புன்னகையோடு பயிற்சி கொடுக்கிறார். கூடவே ஒருநாளைக்கு 4 மணிநேர நடைப்பயிற்சி, வொர்க் அவுட் மற்றும் எளிமையான சாப்பாட்டையும் கடைப்பிடித்து வருகிறார்.
இதனால் தற்போது மீகாவைப் பார்க்கும் பலரும் உடற் பயிற்சிகள் மீது ஆர்வம் கொண்டு தற்போது ஜிம்மிற்கு படையெடுக்கத் துவங்கி இருக்கின்றனர்.
Ultra badass Tekymeka is Japan’s oldest fitness trainer at age 90 (!) and she started her journey to fitness at age 65 so I guess there’s still time for meeee pic.twitter.com/6pIYdTfcVS
— Jeff Yang (@originalspin) April 5, 2021