ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிய யூடியூப் பிரபலம்… வைரலான தகவல்!!
Send us your feedback to audioarticles@vaarta.com
விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்ட யூடியூப் பிரபலம் ஒருவர் தன்னுடைய ஒட்டுமொத்த உருவத்தையும் மறைத்து நாய் போன்ற தோற்றத்துடன் பூங்காவில் நடமாடிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஜப்பான் நாட்டில் வசித்துவரும் டோகோ என்பவர் ‘ஐ வாண்ட் டூ பி அனிமல்‘ எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் வளர்ப்பு விலங்குகளைக் குறித்த வீடியோக்களையும் தகவலையும் வெளியிட்டு வரும் நிலையில் அவருக்கு சிறு வயதில் இருந்தே நாய்கள் என்றால் மிகவும் பிரியம் என்றும் தான் ஒரு நாயாக பிறந்து இருக்கலாம் என்றும் கூறிவந்துள்ளார்.
இந்நிலையில் ஏன் தன்னை ஒரு நாயாக மாற்றிக்கொள்ளக் கூடாது என்று நினைத்த டோகோ விளையாட்டு பொம்மைகளைச் செய்யும் நிறுவனத்திற்கு சென்று தன்னை நாய் உருவத்திற்கு மாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து டோகோவின் உருவத்தை முழுவதுமாக மறைத்து நாய் போன்றே இருக்கும் ஆடை ஒன்றை அந்த நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது. இதனால் நாய் போன்றே இருக்கும் ஆடையை அணிந்துகொண்டு தற்போது டோகோ ஜப்பானில் உள்ள பூக்காங்களுக்கு சென்று வருகிறார்.
மேலும் நாய் உடையில் அலையும் டோகோவை பார்க்கும் சில நாய்கள் அவரிடம் நட்பு பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி மனிதனாக இருக்கும் டோகோவை நாய் உருவத்திற்கு மாற்றுவதற்கு கிட்டத்தட்ட 40 நாட்கள் வரை எடுத்துக் கொண்டதாக கூறியுள்ள அந்த நிறுவனம் இதற்கு ரூ.12 லட்சம் வரை செலவானதாகவும் தெரிவித்து இருக்கிறது.
ஒருவழியாக தன்னுடைய வாழ்நாள் ஆசை நிறைவேறிவிட்ட சந்தோஷத்தில் தற்போது டோகா தனது நாய் உருவ வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். இதனால் 35 ஆயிரம் ஃபாலோயர்களைக் கொண்டிருந்த அவருக்கு தற்போது 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வளர்ந்துவிட்ட சமூக வலைத்தள மோகத்தில் பலரும் இதுபோன்று வித்தியாசமாக தங்களைக் காட்டிக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். இதனால் ஒருசில நேரங்களில் மோசமான அசம்பாவிதங்களும் நடக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் இன்ஸ்டா போன்ற சமூகவலைத் தளங்களில் மும்முரமாக இயங்கிவரும் 30 வயது பிரபலம் ஒருவர் உயரமான கட்டிங்களில் இருந்து போட்டோக்களை எடுத்து அதன்மூலம் பிரபலமாகி வந்த நிலையில் சமீபத்தில் உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்து புகைப்படம் எடுக்க முற்பட்டபோது நிலைதடுமாறி 69 ஆவது மாடியில் இருந்து தவறிவிழுந்துள்ளார். இதனால் அவர் பிரிதாபமாக உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout