ஜப்பான் ஒசாகா விருது… சிறந்த நடிகர் விஜய், விஜய்சேதுபதி என விருது பெறும் முக்கிய பிரபலங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜப்பான் நாட்டில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘ஒசாகா சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு அதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், திரைப்படம் என்று பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களுக்கு தற்போது விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் நடிகர் விஜய், விஜய்சேதுபதி, இயக்குநர் பா.ரஞ்சித், வெங்கட் பிரபு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சிறந்த நடிகர் விருது – ‘மாஸ்டர்‘ படத்திற்காக நடிகர் விஜய்
சிறந்த நடிகை – ‘தலைவி‘ படத்தில் நடித்த கங்கனா ரணாவத்
சிறந்த இயக்குநர் விருது – ‘சார்பாட்டா பரம்பரை’ படத்திற்காக பா.ரஞ்சித்
சிறந்த இசையமைப்பாளர் விருது - யுவன் சங்கர் ராஜா
சிறந்த திரைப்படம் - ‘சார்பாட்டா பரம்பரை‘
சிறந்த திரைக்கதை விருது – ‘மாநாடு‘ படத்திற்காக வெங்கட்பிரபு
சிறந்த வில்லன் விருது – ‘மாஸ்டர்‘ படத்தில் நடித்த விஜய்சேதுபதி
சிறந்த துணை நடிகர் – ‘ஜெய்பீம்‘ படத்தில் நடித்த மணிகண்டன்
சிறந்த துணை நடிகை ‘ஜெய்பீம்‘ படித்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதைத் தவிர,
சிறந்த ஒளிப்பதிவாளர் பிரிவில் – ‘கர்ணன்‘ திரைப்படத்திற்காக தேனி ஈஸ்வர்
சிறந்த நடன அமைப்பு – ‘வாத்தி கம்மிங்‘ பாடலுக்காக தினேஷ் குமார்
சிறந்த நகைச்சுவை நடிகர் – ‘டாக்டர்‘ படத்திற்காக ரெடின் கிங்ஸ்லி
சிறந்த குழந்தை நட்சத்திரம் – ‘டாக்டர்‘ படத்திற்காக சாரா வின்சென்ட்
சிறந்த படத்தொகுப்பு – ‘மாநாடு‘ படத்திற்காக பிரவீன் கே.எல்
சிறந்த சண்டை அமைப்பு – ‘சுல்தான்‘ படத்திற்காக திலீப் சுப்புராயன்
சிறந்த கலை அமைப்பு – ‘சார்பாட்டா பரம்பரை‘ படத்திற்காக ராமலிங்கம்
சிறந்த ஒலி வடிவமைப்பு – ‘அரண்மனை 3‘ படத்திற்காக உதய்குமார்
ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒசாகா சிறப்பு விருது பிரிவில் ‘மண்டேலா‘ திரைப்படத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout