ஒலிம்பிக் கமிட்டி துணை தலைவருக்கே கொரோனா! நடக்குமா ஒலிம்பிக்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் இவ்வாண்டு ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியை நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனையை ஒலிம்பிக் கமிட்டி குழுவினர் கடந்த சில நாட்களாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டி கமிட்டியின் துணைத் தலைவர் கோசோ தஷிமாவ் என்பவருக்கு திடீரென கொரோனோ அறிகுறி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது இதனால் ஒலிம்பிக் கமிட்டி குழுவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டியை நடத்தலாமா? என்று ஆலோசனை செய்து வரும் கமிட்டியின் துணைத் தலைவருக்கே கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடக்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளை ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்படுத்தி உள்ள கொரோனோ தற்போது விளையாட்டுத் துறையிலும் கைவைத்து விட்டது. ஏற்கனவே ஐபிஎல் உள்பட பல போட்டிகள் ஒத்திவைக்கப்படும் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் ஒலிம்பிக் போட்டியும் ரத்து செய்ய, அல்லது ஒரிரு ஆண்டுகள் ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout