காதலி இல்லையா? வாடகைக்கு எடுத்துக்கொள்ள அரசாங்கமே அனுமதிக்கும் விசித்திரம்…!
- IndiaGlitz, [Thursday,July 20 2023]
தனிமை எனும் கொடுமையில் இருந்து தப்பித்துக் கொள்ளத்தான் பலரும் திருமணமே செய்து கொள்கின்றனர். ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தால் தங்களுக்கு ஏற்ற துணையை தேர்வு செய்ய முடியாமல் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தவித்துவரும் நிலையில் அவர்களுக்காகவே பிரத்யேகமாக ஜப்பான் நாட்டில் ஒரு திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
அதாவது ஜப்பான் நாட்டில் காதலிக்க ஆள் இல்லாமல் தனிமையில் வாடிவரும் இளைஞர்கள் அரசாங்கமே ஏற்பாடு செய்திருக்கும் ஒரு இணைதளத்திற்கு சென்று காதலிக்க ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அப்படியில்லாமல் ஓரினச் சேர்க்கையாளராக இருந்தாலும் அதற்கு என்று தனியாகவே இளையதளம் துவங்கப்பட்டு இருக்கிறது.
இந்த இணையதளத்தில் காதலிக்க தங்களுக்கான துணையைத் தேடும் இளைஞர்கள் ஒரு மணி நேரத்தில் ரூ.3,000 செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் இதில் இருக்கும் கூடுதல் தகவல் என்னவென்றால் முதல் முறை அந்த இணையதளத்தைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு இலவசமாக சேவை கிடைக்கும். அடுத்த முறை உங்களது காதலியை நீங்கள் புக் செய்ய விரும்பினால் குறைந்தது 2 மணிநேரத்திற்கு அவர்களை வாடகைக்கு எடுக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் ஒரு ஆணாக இருந்து ஒரு பெண்ணை வாடகைக்கு எடுக்க விரும்பினால் நீங்கள் கூடுதலாக ரூ.1,200 செலுத்த வேண்டும். இப்படி வாடகைக்கு எடுத்து காதலிக்க விரும்பும் இளைஞர்கள் இதற்காக முன்பணமும் செலுத்த வேண்டியிருக்கும்.
பார்ப்பதற்கு ஏதோ வேண்டாத சேவை போல தெரியலாம். ஆனால் வாடகைக்கு எடுத்து காதலிக்கும் இந்தத் திட்டத்திலும் பல்வேறு கட்டுபாடுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதாவது வாடகைக்கு எடுக்க விரும்பும் காதலி அல்லது காதலன் யாருடனும் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள கூடாது. நிர்வாகத்தின் வழியாகவே அர்வகளைத் தொடபு கொள்ள வேண்டும். அடுத்து வாடகைக்கு எடுக்கும் தங்களது காதலிக்கோ அல்லது காதலனுக்கோ விலையுயர்ந்த பரிசு பொருட்களைக் கொடுக்கக் கூடாது.
இந்தத் திட்டத்தில் பணியாற்றிவரும் ஒரு பெண் கூறும்போது பெரும்பாலும் தனிமையில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களே இப்படி வாடகைக்கு காதலிகளைத் தேடுவதாகக் கூறியுள்ளார். மேலும் தங்களுக்கான நபரைத் தேர்ந்தெடுக்கக் கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அதனால் இதுபோன்ற சேவை அவர்களின் தனிமையைப் போக்க உதவுகிறது என்றும் குறிப்பிட்டு இருப்பது பலரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜப்பானில் துவங்கப்பட்டு இருக்கும் வாடகைக்கு காதலி கிடைக்கும் எனும் தகவலை பார்த்த நம்மூர் 90-ஸ் கிட்ஸ்கள் பலரும் இந்தியாவிலும் இப்படியொரு சேவை இருந்தால் நன்றாக இருக்குமே? என்று ஏக்கத்தை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.