சிங்கம் சிங்கிளாத்தான் வரும்: ரஜினியின் அரசியலுக்கு ஜப்பான் ரசிகர்கள் ஆதரவு

  • IndiaGlitz, [Wednesday,January 10 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'முத்து' படத்தில் இருந்து அவர் நடித்த அனைத்து படங்களும் ஜப்பானில் ஹிட்டானது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தை போலவே அவருக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றம் தோன்றியது. இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தவுடன் தமிழக ரசிகர்கள் அந்த அறிவிப்பினை திருவிழா போல் கொண்டாடினர். இந்த நிலையில் அவரது படங்கள் போலவே அவரது அரசியலும் ஜப்பானை சென்றடைந்துள்ளது. ரஜினியின் தமிழக அரசியல் வருகைக்கு ஜப்பான் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜப்பானை சேர்ந்த ஒரு ரசிகர் தமிழில் பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அந்த ரசிகர் கூறியிருப்பதாவது:

வணக்கம், நான் அரசியலுகு வருவது உறுதி என ரஜினி சார் சொன்ன போது ஜப்பான் ரஜினி ரசிகர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். நாங்கள் தமிழர்கள் இல்லை. ஆனாலும் தமிழ் திரைப்படம், தமிழ் மக்கள் அற்புதமான தமிழ் கலாச்சாரம் ரொம்ப பிடிக்கும். எனவே நாங்கள் ரஜினி அவர்களின் அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்போம். எப்போதும் தயவுசெய்து எங்கள் நண்பராக இருங்கள். சிங்கம் ஒன்று புறப்பட்டதே! கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும். மகிழ்ச்சி' என்று கூறியுள்ளார்.

 

More News

பிக்பாஸ் ஜூலியின் முதல் பட ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்கேற்பாளர்களான ஓவியாவுக்கு பாசிட்டிவ் புகழ் கிடைத்த நிலையில் அதே நிகழ்ச்சியின் இன்னொரு பங்கேற்பாளரான ஜூலிக்கு நெகட்டிவ் புகழ் கிடைத்தது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் திரையுலகில் வெகு அரிதாகவே சென்னை பெண்கள் பிரபலமாகி வரும் நிலையில் அவர்களில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்

ஊதிய உயர்வு கேட்காத எம்.எல்.ஏக்களுக்கு இன்று ஊதிய உயர்வு மசோதா தாக்கல்

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏழு நாட்களாக போராடி வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காத நிலையில் இன்று ஊதிய உயர்வே கேட்காத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு

ஆதார் பாதுகாப்பு குளறுபடி: 5000 அதிகாரிகள் மீது நடவடிக்கை

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை தேவை என்பதின் அவசியத்தை அறிவுறுத்திய மத்திய மாநில அரசுகள் அந்த ஆதார் அட்டையுடன் அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைக்க வலியுறுத்தியது.

ஜெ.தீபாவின் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்