பிரபல நகைச்சுவை நடிகர் கொரோனாவிற்கு பலி: ரசிகர்கள் அதிர்ச்சி


Send us your feedback to audioarticles@vaarta.com


ஏழை முதல் பணக்காரர் வரை, பாமரர் முதல் பெரிய பதவியில் இருப்பவர் வரை பாகுபாடின்றி கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவரும் கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளது அவரது ரசிகர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது
ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா என்பவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கியது தெரிய வந்ததை அடுத்து அவர் கடந்த சில நாட்களாக டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கென் ஷிமுராவுக்கு கொரோனா காய்ச்சல் மட்டுமின்றி நிமோனியா காய்ச்சலும் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன் அவர் மரணமடைந்ததாக வெளிவந்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா, மேற்கு டோக்கியோவை அடுத்துள்ள ஹிகஷிமுராயமா என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். ஜப்பானிய ’ராக் பேண்ட்’ மற்றும் காமெடி குழுவான ’தி ட்ரிஃப்டர்ஸ்’ என்ற குழுவில் இணைந்து ஒருசில காமெடி ஷோக்களில் நடித்து வந்தார். 1980-களில் ஹிட்டான ’பாகா டொனோசமா’ (முட்டாள் பிரபு) மற்றும் ’ஹென்னா ஓஜிசான்’ ஷோக்களில் நடித்து தனது நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமானோர் மனதில் இடம்பிடித்தார். கென் ஷிமுரா அவர்களின் மறைவு ஜப்பான் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
