'காவாலா' பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஜப்பான் தூதர்.. ரஜினி போலவே கண்ணாடி போட்டு அசத்தல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலுக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
’ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற தமன்னாவின் ‘காவாலா’ பாடல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்தது என்பதும் பல சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்கள் இந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியான பிறகு ‘காவாலா’ பாடல் இன்னும் அதிகமாக பிரபலமாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் பூட்டான் நாட்டிற்கான ஜப்பான் தூதர், ஹிரோஷி சுசுகி என்பவர் ஜப்பான் நாட்டின் பிரபல யூடியூப் பிரபலத்துடன் இணைந்து ‘காவாலா’ பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .
இந்த வீடியோவின் இறுதியில் ரஜினி போலவே அவர் ஸ்டைலாக கண்ணாடி அணிந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து, இந்த வீடியோவுக்கு லைக், கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.
Kaavaalaa dance video with Japanese YouTuber Mayo san(@MayoLoveIndia)🇮🇳🤝🇯🇵
— Hiroshi Suzuki, Ambassador of Japan (@HiroSuzukiAmbJP) August 16, 2023
My Love for Rajinikanth continues … @Rajinikanth #Jailer #rajinifans
Video courtesy : Japanese Youtuber Mayo san and her team pic.twitter.com/qNTUWrq9Ig
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments