'காவாலா' பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஜப்பான் தூதர்.. ரஜினி போலவே கண்ணாடி போட்டு அசத்தல்..!

  • IndiaGlitz, [Wednesday,August 16 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலுக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற தமன்னாவின் ‘காவாலா’ பாடல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்தது என்பதும் பல சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்கள் இந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியான பிறகு ‘காவாலா’ பாடல் இன்னும் அதிகமாக பிரபலமாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் பூட்டான் நாட்டிற்கான ஜப்பான் தூதர், ஹிரோஷி சுசுகி என்பவர் ஜப்பான் நாட்டின் பிரபல யூடியூப் பிரபலத்துடன் இணைந்து ‘காவாலா’ பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .

இந்த வீடியோவின் இறுதியில் ரஜினி போலவே அவர் ஸ்டைலாக கண்ணாடி அணிந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து, இந்த வீடியோவுக்கு லைக், கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

More News

யம்ம யம்மா..யம்மம்மா..  பாவாடை தாவணியில் டிக் டாக் இலக்கியாவின் வேற லெவல் டான்ஸ்.. !

டிக் டாக் மூலம் பிரபலமான நடிகை இலக்கியா டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட உடன் இன்ஸ்டாகிராமில் கிளாமர் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் இளசுகள் மத்தியில் வைரல்

முதல்முறையாக ரொமான்ஸ் ஹீரோவாகும் விஜய் ஆண்டனி.. நாயகி இந்த பிரபல நடிகையா?

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இதுவரை அதிரடி ஆக்சன் படங்களை தேர்வு செய்து நடித்த நிலையில் தற்போது முதல் முறையாக முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதை அம்சம்

ஒரு கையில் குழந்தை.. இன்னொரு பக்கம் கணவருக்கு முத்தம். . பூஜா ராமச்சந்திரன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகர் ஜான் கோகைன் மற்றும் நடிகை பூஜா ராமச்சந்திரன் ஆகியோருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் தற்போது இருவரும் எடுத்துள்ள புதிய போட்டோஷூட்  புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

'தனி ஒருவன் 2': முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா - ஜெயம் ரவி..!

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த 'தனி ஒருவன்' என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியானது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடிக்கும்

பிரபுதேவாவுக்காக விஜய் சேதுபதி பாடிய பாடல்... வீடியோ வைரல்..!

பிரபுதேவா நடித்த 'வுல்ஃப்' என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பாடல் தற்போது வெளியாகி பாடலின் வீடியோ இணையத்தில