என்னையும் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தார்கள்: கார்த்தியின் 'ஜப்பான்' நடிகை அதிர்ச்சி தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்கள் என பல ஆண்டுகளாக நடிகைகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தற்போது கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்தில் நடித்த நடிகை அனு இமானுவேல் இதே குற்றச்சாட்டை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’துப்பறிவாளன்’ சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் மலையாளம் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் அனு இமானுவேல். இவர் தற்போது கார்த்தியின் ‘ஜப்பான்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த நடிகை அனு இமானுவேல் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். ‘பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என்று என்னையும் ஒரு சிலர் அழைத்தார்கள் என்றும் ஆனால் நான் அதை பயப்படாமல் என்னுடைய குடும்பத்தின் துணைகொண்டு எதிர்கொண்டு சமாளித்தேன் என்றும் தெரிவித்தார்.
இது போன்ற சிக்கலான நேரத்தில் குடும்பத்தினர்களுடன் சேர்ந்து இந்த பிரச்சனையை எதிர்கொள்வது தான் நல்லது என்றும் நம்முடைய குடும்பத்தினர் கண்டிப்பாக இதற்கு உதவி செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பெண்களை முன்னேற விடாமல் தடுக்கும் மோசமான நபர்களை கண்டு பயப்படாமல் துணிந்து முன்னேற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments