போனிகபூரின் மறுப்பையும் மீறி உண்மையான வதந்தி..  ஜான்வி கபூரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,March 06 2023]

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், லிங்குசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’பையா 2’ என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் ’பையா 2’ உள்பட எந்த ஒரு தென்னிந்திய திரைப்படத்திலும் நடிக்க ஜான்விகபூர் ஒப்பந்தம் ஆகவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சற்று முன் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஜான்வி கபூர் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஜூனியர் என்.டி.ஆரின் 30வது திரைப்படத்தில் ஜான்விகபூர் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள ஜான்விகபூர் ’கடைசியில் நான் நினைத்தது நடந்து விட்டது, எனது விருப்பத்துக்குரிய நடிகர் ஜூனியர் என்டிஆர் உடன் நடிக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகையாக ஸ்ரீதேவி ஒரு காலத்தில் இருந்த நிலையில் அவரைப் போலவே ஜான்வி கபூரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.