தனுஷின் அடுத்த படத்தில் இணைந்த 'பீஸ்ட்' பிரபலம்: சம்பவம் நிச்சயம் இருக்கு?
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாறன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதும் அதே போல் ’தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தனுஷின் 44வது திரைப்படமான ’திருச்சிற்றம்பலம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் பணிபுரிந்த கலைஞர் ஒருவர் இணைந்துள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர். இவர் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிய ஒப்பந்தமாகியுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜானி மாஸ்டர், பிரபுதேவா மற்றும் பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் நடன இயக்குனராக பணியாற்றிய தனுஷின் ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ’ரவுடி பேபி’ பாடல் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று மிகப்பெரிய அளவில் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ’திருச்சிற்றம்பலம்’ படத்திலும் ஒரு சம்பவம் இருக்கு என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
’திருச்சிற்றம்பலம்’ படத்தில் ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.
Blessed to team up with Global star @dhanushkraja Sir for #Thiruchitrambalam #D44 ??
— Jani Master (@AlwaysJani) September 19, 2021
Get ready to witness his graceful moves to the crazy song composed by @anirudhofficial sir in theatres ??
Thank you #MithranJawahar & @sunpictures for the opportunity. @MenenNithya pic.twitter.com/WObxsXBknR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout