மஞ்சள் மேகம்… சேலையில் மிளிரும் நடிகை ஜான்வியின் க்யூட் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
போனிகபூர்- மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதிகளின் மூத்த மகளான நடிகை ஜான்வி தற்போது பாலிவுட்டில் வரவேற்பு பெற்ற நடிகையாக வலம்வருவது ரசிகர்களுக்குத் தெரிந்ததே. தற்போது அவர் முதல் முறையாக தென்னிந்திய சினிமாவிலும் கால்தடம் பதிக்க இருக்கிறார். இந்நிலையில் அவர் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
நடிகை ஜான்வி கபூர் கடந்த 2018 இல் கரண் ஜோகரின் தயாரிப்பில் முதல் முறையாக “தடக்“ திரைப்படத்தில் அறிமுகமானார். அறிமுகமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்ததை அடுத்து தற்போது பல்வேறு ஹிட் படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். மேலும் முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் “ஜன கன மன“ திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு “லைகர்“ திரைப்படத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் நடக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைத்தவிர நடிகை ஜான்வி பாலிவுட்டில் அரை டஜன் திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இவையனைத்தும் இந்த வருடத்தில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் உருவாகியுள்ள “வலிமை“ திரைப்படத்திற்கான ப்ரமோஷன்களிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் “வலிமை“ திரைப்படத்தை அவர் பிரான்ஸில் பார்க்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நடிகை ஜான்வி மஞ்சள் நிறத்தில் சேலையணிந்து போட்டோஷுட் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று 7 லட்சம் லைக்ஸ்குகளை குவித்திருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments