அன்னையர் தினத்தில் ஜான்விகபூர் வெளியிட்ட நெகிழ வைக்கும் ஸ்ரீதேவி புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையிலான நட்சத்திரங்கள் தங்களுடைய அன்னையுடன் உள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்
அந்த வகையில் சமீபத்தில் தனது தாயார் ஸ்ரீதேவியை இழந்த அவருடைய மகள் ஜான்வி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஜான்வி கபூரின் சிறுவயது புகைப்படமான இந்த புகைப்படத்தில் ஸ்ரீதேவியின் தாயன்பு தத்ரூபமாக வெளிப்படுவதாக பலர் கமெண்ட் பகுதியில் கருத்து கூறி வருகின்றனர்.
மேலும் அம்மா இல்லை என்று கவலைப்பட வேண்டாம், உங்கள் அம்மா உங்கள் அருகில் எப்போதும் இருந்து உங்களை ஆசிர்வதிப்பார் என்று பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments