நான் பார்த்த முதல் முகம் நீ… ஸ்ரீதேவி மகள் செய்த நெகிழ்ச்சி காரியம்!

  • IndiaGlitz, [Thursday,December 02 2021]

போனிகபூர் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் “வலிமை“ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் அஜித் காவல் அதிகாரி வேடத்தில் நடிக்க இருப்பதும் அவருடைய அம்மா கதாபாத்திரத்தில் நடிகை சுமித்ரா நடிக்க இருப்பதும் ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் தற்போது “வலிமை“ படத்தின் இரண்டாவது சிங்கிள்ஸ் பாடலின் ப்ரமோ நேற்று வெளியிடப்பட்டது. யுவன்சங்கர் ராஜா இசையில் சிட்ஸ்ரீராம் குரலில் அமைந்துள்ள இந்தப் பாடலின் துவக்கத்தில் நடிகர் அஜித் தாய்ப் பாசத்தை அள்ளி தெளிப்பதைப்போல, “நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ…“ எனச் சொந்தமாக குரல் கொடுத்திருக்கிறார். இதை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். வரும் 5 ஆம் தேதி மாலை வெளியாகவுள்ள இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் இப்போதே பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தாய்ப்பாசத்தை மையமாகக் கொண்டு அமைந்திருக்கும் இந்தப் பாடல் வரிகளை தற்போது ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் தமிழில் பதிவிட்ட நடிகை ஜான்விகபூர் தனது அம்மா ஸ்ரீதேவியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதையடுத்து, அப்பா போனி கபூர் தயாரித்த “வலிமை“ பாடல் வரிகளுக்கு அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நடிகை ஜான்வி கபூரின் இந்தப் பதிவை பிரபலங்கள் பலரும் ரிடீவிட் செய்து வருகின்றனர். மேலும் தாய்ப்பாசத்தின் அருமை குறித்தும் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.