ரூ.36 கோடிக்கு வீடு வாங்கிய 4 படங்கள் மட்டுமே நடித்த நடிகை!
- IndiaGlitz, [Tuesday,January 05 2021]
நான்கு படங்கள் மட்டுமே நடித்த ஒரு நடிகை ரூபாய் 36 கோடிக்கு மும்பையில் சொந்த வீடு வாங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்பட்டவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு ’தடக்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த படங்களின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படங்கள் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் மும்பையில் உள்ள முக்கிய பகுதியில் ரூபாய் 36 கோடிக்கு வீடு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வீட்டின் சதுர அடி 3456 என்றும் பத்திரச் செலவு மட்டுமே 78 லட்சம் ரூபாய் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மூன்று மாடிகள் கொண்ட இந்த வீட்டை ஜான்வி கபூர் வாங்கி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாக பாலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர். ஏற்கனவே தனது தந்தை போனி கபூர் மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வரும் ஜான்வி கபூர் புதிய வீட்டிற்கு விரைவில் குடியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பாலிவுட் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்த ஹிருத்திக் ரோஷன், அலியாபட், ரன்வீர்கபூர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கோடிக்கணக்கான மதிப்பில் முக்கிய முக்கிய பகுதிகளில் வீடுகளை வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நான்கு படங்கள் மட்டுமே நடித்த ஒரு நடிகை ரூபாய் 36 கோடிக்கு மும்பையின் முக்கிய பகுதிகளில் வீடு வாங்கி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது