நெகிழ்ச்சியோடு முத்தமிட்ட நடிகை ஜான்வி கபூர்… யாருக்குத் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்துவரும் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதிகளின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருந்து வருகிறார். இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களிடையே கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் “தடக்“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஜான்வி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்று தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் அவ்வபோது கோவில்களுக்குச் செல்வது, சுற்றுலா செல்வது போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதேபோல தனது சகோதரி குஷியுடன் நேரத்தை செலவிடுவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் நடிகை ஜான்வி கபூர் தனது சகோதரி குஷி கபூருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது. அதாவது ஒரே நிறத்தில் ஆடையணிந்துள்ள ஜான்வி மற்றும் குஷி இருவரும் தங்களது கைகளைக் கோர்த்தவாறு நின்றபடியே அன்பான முத்தத்தை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கின்றனர். சகோதரிகளின் பாசப் பிணைப்பை உறுதிச் செய்யும் இந்தப் புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments