சி.வி.குமார் தயாரிப்பில் தமிழின் முதல் ஃபேமிலி டைம்லூப் திரைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான சி.வி.குமார் அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், உள்பட பல வெற்றிப்படங்களை தயாரித்தும், 'மாயவன்' என்ற படத்தை இயக்கியும் உள்ளார். தற்போது அவர் '4ஜி', 'டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும்' ஆகிய படங்களை தயாரித்தும், 'கேங்ஸ் ஆப் மெட்ராஸ்' என்ற படத்தை இயக்கியும் வருகிறார்.
இந்த நிலையில் சி.வி.குமாரின் தயாரிப்பில் மேலும் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது. இதுவரை தமிழில் ஆக்சன் படங்கள் மட்டுமே டைம்லூப் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படம் தமிழின் முதல் ஃபேமிலி டைம்லூப் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு 'ஜோங்கோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டு டைட்டில் போஸ்டரும் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனோ கார்த்திக் இயக்கத்தில் ஷ்யாமங்கலன் இசையில் கார்த்திக் தில்லை ஒளிப்பதிவில் ராதாகிருஷ்ணன் தனபால் படத்தொகுப்பில் கோபி ஆனந்த் கலை இயக்கத்தில், ஹரி தினேஷ் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout