காமெடி நடிகை மதுமிதாவின் திருமண தேதி

  • IndiaGlitz, [Wednesday,February 13 2019]

'ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்பட பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள ஜாங்கிரி மதுமிதா உதவி இயக்குனர் மோசஸ் ஜோல் என்பவரை பிப்ரவரி 15ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து கூறிய மதுமிதா, 'தனது தாயாரின் தம்பியின் மகன் தான் மணமகன் என்றும் இரண்டு குடும்பமும் கடந்த பல ஆண்டுகளாக நல்ல உறவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தங்களது திருமணத்தை இரண்டு குடும்பத்தினர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்துவிட்டதாகவும் மதுமிதா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏற்கனவே தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்ட மதுமிதா, அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தில் நடித்த பின்னர் அந்த படத்தின் வெற்றியால் மேலும் பல வாய்ப்புகளை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

50 பயணிகளை காப்பாற்றி உயிர்த்தியாகம் செய்த சென்னை பேருந்து ஓட்டுனர்

சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர் ஒருவர் பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பயணிகளின் பாதுகாப்பை கருதி பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு மரணம் அடைந்தார்.

'காற்றின் மொழி' பட நடிகை கர்ப்பம்: ரசிகர்கள் வாழ்த்து

ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த 'காற்றின் மொழி' திரைப்படத்தில் ஆர்ஜே அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்து அனைவர் மனதையும் கவர்ந்தவர் நடிகை சாண்ட்ரா.

'மகரிஷி' நாயகனை சந்தித்த 'தேவ்' நாயகன்

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படம் நாளை காதலர் தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதால் படத்தின் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 22ல் வெளியாகும் படங்கள் குறித்து ஒரு பார்வை;

ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் மூன்று தமிழ் சினிமாக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் வரும் 22ஆம் தேதி ஐந்து திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

2ஆம் பாகமாக உருவாகும் பிரசன்னாவின் வெற்றிப்படம்

பிரசன்னா, லைலா நடிப்பில் பிரியா இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'கண்ட நாள் முதல்'.