மக்கள் சுய ஊரடங்கு நாளை காலை வரை நீடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுயஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் இந்த சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வீட்டுக்குள் இருந்து பிரதமரை வேண்டுகோளுக்கு செவி சாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று இரவு 9 மணிக்கு பின்னரும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு தொடரும் என சற்றுமுன் தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா நோய் பரவுவதை தடுக்க இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து மேற்கொண்ட இந்நிகழ்வில் பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இரவு 9 மணிக்கு நிறைவேற உள்ளது
இந்த ஊரடங்கு நிகழ்வில் மக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை தொடரும் என அறிவிக்கப்படுகிறது. இருப்பினும் அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெற எந்த தடையும் இல்லை என தெளிவு படுத்தப்படுகிறது. இதற்கு முழு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பொதுமக்கள் நலன் கருதி ஊரடங்கு நிகழ்வு நாளை (23.3.2020) காலை 5 மணி வரை தொடரும்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 22, 2020
ஊரடங்குக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.#JanataCurfew #TamilNadu #TNGovt #TN_Together_AgainstCorona pic.twitter.com/MoePtykViE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments