பயங்கர ஷாக்கான விஷயம்: ஜெயம் ரவியின் பேட்டி!

  • IndiaGlitz, [Monday,March 15 2021]

இயக்குனர் ஜனநாதன் அவர்கள் நேற்று காலமான நிலையில் அவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. அதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் உருவான ’பேராண்மை’ என்ற படத்தில் நடித்த ஜெயம் ரவி இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜனநாதன் சார் அவர்கள் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் மாதிரி. எங்கள் வீட்டில் எந்த ஒரு விழா நடந்தாலும் அவர்கள் இல்லாமல் நடக்கவே நடக்காது. இயக்குனர் என்பதை எல்லாம் தாண்டி அவர் எனக்கு ஒரு சகோதரர் மாதிரி. எப்பொழுதும் என்னுடைய நலனில் அவருக்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருக்கும். எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

அவரது மறைவு எனக்கு மிகவும் ஒரு ஷாக்கிங் ஆன விஷயம், அவரது ஆத்மா சாந்தி அடைய நான் பிரார்த்தனை செய்கிறேன். எல்லாவற்றையும் தாண்டி அவரை விட ஒரு சிறந்த மனிதரை நான் பார்த்ததே இல்லை. ரொம்ப சீக்கிரமாக நம்மை விட்டுப் போய்விட்டாரே என்று எல்லோருக்கும் வருத்தம்.

அவருடைய படங்கள் மூலமாக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார், வாழ்ந்து கொண்டேதான் இருப்பார். கண்டிப்பாக அவருக்கு ஈடு இணை யாரும் இல்லை என்பதே உண்மை. அவருடன் நான் இத்தனை வருடங்கள் பயணம் செய்தது மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். எனக்கும் சரி சக நடிகர்களுக்கும் சரி பல விஷயங்களை அவர் சொல்லிக் கொடுத்து இருக்கின்றார். அவர் எப்போதும் எங்களுடன் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்’ என்று கூறினார்

More News

சன் மியூசிக் தொகுப்பாளினிக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்!

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்த ஒருவரின் மகனுக்கு 10வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டதை அடுத்து, அவருக்கு இவ்வளவு பெரிய மகனா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விஜயகாந்த் தொகுதியில் பிரேமலதா!

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, அமமுக கூட்டணியில் இணைந்தது என்றும் அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் காமெடி நடிகர்: நாளை வேட்புமனு தாக்கல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர்

வீடுதேடி வரும் ரேசன், அரசு கேபிள் இலவசம்: அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

அதிமுக தேர்தல் அறிக்கை சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 'அந்நியன்' பட நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியானது என்பதும் அதில் நடிகை குஷ்பூ சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்