ஒவ்வொரு நடிகரும் ஒருமுறையாவது பாலா படத்தில் நடிக்க வேண்டும் - ஜனனி ஐயர்

  • IndiaGlitz, [Saturday,April 09 2016]

பாலாவின் அவன் இவன்' படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் பல படங்களில் நடித்த நடிகை ஜனனி ஐயர், தற்போது உல்டா, மற்றும் தொல்லைக்காட்சி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், 'கோலிவுட்டில் உள்ள ஒவ்வொரு நடிகரும் நடிப்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள ஒரே ஒரு முறையாவது பாலா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் உல்டா படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் இந்த படத்தில் தனக்கு இரண்டு கேரக்டர் என்றும் கூறிய ஜனனி, தொல்லைக்காட்சி படத்தில் தனது கேரக்டரின் பெயர் மலர் என்றும் இந்த படம் முழுவதும் முதல்முறையாக பாவாடை தாவணி காஸ்ட்யூமில் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 'பிரேமம்' படத்திற்கு பின்னர் மலர் என்ற பெயருக்கு ஒரு வசீகரம் இருப்பதால் இந்த கேரக்டரில் கூடுதல் கவனத்துடன் நடித்ததாக கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய திருமணம் நிச்சயம் காதல் திருமணம்தான் என்றும் ஆனால் இப்போதைக்கு என்னுடைய கவனம் முழுவதும் நடிப்பில் இருப்பதாகவும் திருமணம் உரிய காலத்தில் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.