ஜனனி ஐயருக்கு கிடைத்த 'மலர்' கேரக்டர்

  • IndiaGlitz, [Sunday,July 10 2016]

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பிரேமம்' படம் என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது சாய்பல்லவி நடித்த மலர் கேரக்டர்தான். கேரளாவில் பல பெண் குழந்தைகளுக்கு மலர் என்ற பெயரை வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில் பிரபல நடிகை ஜனனி ஐயர் 'மலர்' என்ற கேரக்டரில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இந்த படத்திற்கும் 'பிரேமம்' படத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதிக் கான் இயக்கத்தில் அஸ்வின் ஜோடியாக ஜனனி ஐயர் நடித்து வரும் படம் 'தொல்லைக்காட்சி'. இந்த படத்தில்தான் ஜனனி ஐயர் 'மலர்' என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க பாவாடை தாவணியில் கலாச்சாரமான தமிழ்ப்பெண்ணாக ஜனனி ஐயர் இந்த படத்தில் நடித்து வருகிறாராம்.
மேலும் விஜய்சேதுபதியுடன் 'உல்டா', கலையரசனுக்கு ஜோடியாக ஒரு படம், டார்லிங் 2' நடிகர் ரமேஷ் ராஜாவுடன் ஒரு படம் என தமிழில் ஜனனி ஐயர் பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.