பிக்பாஸ் 2: ரூ.10 லட்சத்தை இழந்த ஜனனி

  • IndiaGlitz, [Sunday,September 30 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று இறுதி போட்டியில் பங்கேற்ற ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நால்வருக்கும் ஒரு ஆப்சன் கொடுக்கப்பட்டது. இதன்படி இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் தற்போது ரூ.10 லட்சத்தை பெற்றுவிட்டு வெளியேறிவிடலாம் என்பதுதான்

கடந்த சில நாட்களாக வருகை தந்த விருந்தினர்கள் ரித்விகாதான் வின்னர் என்று மறைமுகமாக கோடிட்டு காட்டியதால் ஆரம்பம் முதலே ரித்விகா இந்த ஆப்சனை ஏற்க தயாராக இல்லை. ஐஸ்வர்யா கொஞ்சம் முடிவெடுக்க திணறினாலும் இறுதியில் அவரும் இந்த ஆப்சனை பயன்படுத்தவில்லை.

ஜனனி குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் என்பதால் அவர் இந்த ரூ.10 லட்சத்தை பெற்று வெளியேறி இருக்கலாம் என ஆடியன்ஸ் கருதினாலும் ஜனனிக்கு தான் வெல்வோம் என்ற தன்னம்பிக்கை இருந்ததால் அவரும் இந்த ஆப்சனை பயன்படுத்தவில்லை. மொத்தத்தில் யாரும் இந்த ஆப்சனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் நேற்றைய இறுதிக்கட்டத்தில் ஜனனி வெளியேற்றப்பட்டார். ஜனனியின் வெளியேற்றம் கமல்ஹாசன், மும்தாஜ் உள்பட பலருக்கு அதிருதியை ஏற்படுத்தியது என்பது அவர்களுடைய பேச்சில் இருந்து தெரியவந்தது.

More News

அட்மின்தான் காரணம் என்று கூறுவது டிரெண்டாகி விட்டது: '96' பட விழாவில் விஜய்சேதுபதி

பொதுவெளியில் கத்தி பேசிவிட்டு பின்னர் நான் பேசவில்லை, என்னுடையா அட்மின் தான் காரணம் என்று கூறுவது டிரெண்ட் ஆகிவிட்டதாக நடிகர் விஜய்சேதுபதி கூறினார்.

இணையத்தில் வைரலாகும் 'சர்கார்' படத்தின் புதிய போஸ்டர்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நேர் வழியா? குறுக்கு வழியா? ஐஸ்வர்யாவை மறைமுகமாக கலாய்த்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில் யார் மனதையும் புண்படுத்தாமல் உண்மையாக விளையாடிய ரித்விகாவிற்கு 'பிக்பாஸ் 2' டைட்டில் கிடைக்கவுள்ளது. இந்த டைட்டிலை அடைய

பிக்பாஸ் வீட்டிற்குள் கோப்பையை எடுத்து சென்ற பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் முடிவடையவுள்ளது. ரித்விகாதான் டைட்டில் வின்னர் என்ற அறிவிப்பை கேட்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளது.

கூவத்தூரில் நடந்ததை கூற தயார்! கருணாஸ் மிரட்டலால் ஆளும்கட்சி அதிர்ச்சியா?

முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரியை தவறாக பேசியது மற்றும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியது ஆகிய இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட கருணாஸ் இன்று காலை ஜாமீனில் வெளிவந்தார்.