காயத்ரியாக உருமாறிய மும்தாஜ்: நெட்டிசன்கள் அலசல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவராக வரவேண்டும் என்று விரும்பிய மும்தாஜ், தனக்கு அந்த பதவி கிடைக்காமல் தன்னைவிட வயதில், அனுபவத்தில் குறைந்த ஜனனிக்கு கிடைத்ததில் இருந்தே மும்தாஜ் ஒருமாதிரியாகத்தான் இருந்தார்.
இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் மும்தாஜின் அந்த எண்ணம் உள்ளுக்குள் இருந்து வெடித்து வெளிவந்துவிட்டது. இன்று நடைபெற்ற என்ன சாப்பாடு செய்வது என்ற ஆலோசனை, பின்னர் சண்டையாக மாறியதில் தலைவர் என்ற முறையில் ஜனனி ஏதோ சொல்ல வந்தார். ஆனால் அவரை அடக்கிய மும்தாஜ், நான் பேசும்போது யாருக்கும் குறுக்கே பேசக்கூடாது என்றும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே மும்தாஜ், காயத்ரி போன்று ஒரு ஆளுமை உணர்வுடன் இருப்பதால் மக்களின் எதிர்ப்பு அவருக்கு வலுத்து வருவது புரோவோ வீடியோவின் கமெண்ட்டுகளில் இருந்து தெரிய வருகிறது. இந்த முறை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் பெரும்பாலும் அப்பாவியாகவும் அமைதியாகவும் உள்ளனர்.
ஒருசிலர் மட்டுமே கொஞ்சம் திமிறுடன் இருப்பதால் அவர்கள் முதல் ஆளாக மக்களின் வாக்குகளால் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய #பிக்பாஸ் இன் இரண்டாவது ப்ரோமோ! #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/la9QxeR5zj
— Vijay Television (@vijaytelevision) June 20, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com