சினிமாவில் வில்லன் ஆனாலும் எங்கள் ஹீரோ நீங்கள் தான்: ஜேம்ஸ்பாண்ட் நடிகர் மறைவுக்கு 3வது மனைவி உருக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜேம்ஸ்பாண்ட் படங்கள் உள்பட பல ஹாலிவுட் திரைப்படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்த நடிகர் யாபெட் கோட்டோ என்பவர் காலமானார். அவருக்கு வயது 81.
ரோஜாமூர் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்த ’லிவ் அண்ட் லெட் லிவ்’ என்ற படத்தில் மிஸ்டர் பிக் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாபெட். அதேபோல் ’ஏலியன்' என்ற திரைப்படத்திலும் டென்னிஸ் பார்க்கர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி அர்னால்ட் உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் நடிகர் யாபெட்.
கடந்த 1959ஆம் ஆண்டு ரிட்டா டிட்மேன் என்பவரை திருமணம் செய்த நிலையில் அவரை விவாகரத்து செய்து விட்டு 1975ஆம் ஆண்டு டோனி பெட்டி ஜான் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்தார். இதன் பின்னர் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு 1998ஆம் ஆண்டு டெஸ்ஸி சினாஹன் என்பவரை திருமணம் செய்தார், இவருடன் மட்டுமே யாபெட் 24 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் யாபெட் கோட்டாவுக்கு 6 குழந்தைகள் உள்ளனர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக யாபெட் சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக அவரது மூன்றாவது மனைவி டெஸ்ஸி சினாஹன் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார், சில படங்களில் நீங்கள் வில்லனாக நடித்திருந்தாலும் என்னை பொறுத்தவரை நீங்கள் தான் ஹீரோ. என்னை நன்றாக கவனித்துக் கொண்டீர்கள், உங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று மூன்றாவது மனைவி டெஸ்ஸி சினாஹன் உருக்கமாக தனது பேஸ்புக்கில் பதிவுசெய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout