டைட்டிலுக்கு அர்ச்சனா தகுதியில்லாதவர்.. இவர்தான் டைட்டில் வின்னர்: ஜேம்ஸ் வசந்தன்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் தான் டைட்டில் வின்னர் யார் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு உள்ளது. இதற்கு முந்தைய சீசன்களில் கிட்டத்தட்ட 60 முதல் 70 நாள் முடிந்தவுடன் டைட்டில் வின்னர் இவர் தான் என்பதை பார்வையாளர்கள் கிட்டத்தட்ட யூகித்து விட்டனர்
இந்த நிலையில் இந்த சீசனில் அர்ச்சனா, விசித்ரா, மாயா, பூர்ணிமா, மணி, தினேஷ் ஆகியவர்களில் ஒருவர் டைட்டில் வின்னர் பட்டம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அர்ச்சனாவுக்கு டைட்டில் பட்டம் பெற தகுதி இல்லை என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார். அர்ச்சனாவுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது என்றும் ஒரு டைட்டில் வின்னர் ஆவதற்கு சில தகுதிகள் வேண்டும் என்றும் அதனால் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர், டைட்டில் வின்னருக்கு தகுதியற்றவர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் விசித்ராவுக்கு பல நல்ல குணங்கள் இருப்பதால் அவர் டைட்டில் வின்னராக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அர்ச்சனா டைட்டில் வின்னருக்கு தகுதி இல்லை என்று ஜேம்ஸ் வசந்த் கூறியதை அடுத்து அவரை அர்ச்சனாவின் ஆர்மிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
#BiggBossTamil #BiggBossTamil7 #BiggBossTamilSeason7
— Chubramani (@Harvester_green) December 22, 2023
James Vasanthan sir explains
Why #PRachana should not win the title and set bad example for society
And why #Vichitra should win
With clear logical explanations pic.twitter.com/tg3VVHLahG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments