விஜய்சேதுபதியை விமர்சனம் செய்த நெட்டிசன்: பதிலடி கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்!

  • IndiaGlitz, [Sunday,January 16 2022]

நடிகர் விஜய் சேதுபதியை விமர்சனம் செய்த நெட்டிசன் ஒருவருக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிலடி கொடுத்துள்ளார்

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த ஜேம்ஸ் வசந்தன் அதன்பின் ’சுப்பிரமணியபுரம்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பதும் அதன் பின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒரு புதிய முயற்சியாக திருக்குறளை இசை வடிவில் ஜேம்ஸ் வசந்தன் அமைத்துள்ளார். அனைத்து திருக்குறளையும் இசை வடிவில் அவர் கொடுத்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் ’இசை வடிவில் திருக்குறள் கடவுள் வாழ்த்து’ என்ற தலைப்பை கொண்ட இந்த வீடியோவை விஜய் சேதுபதி வெளியிடுவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதற்கு ஒரு நெட்டிசன், ‘விஜய் சேதுபதி வெளியிடுகிறார் என்பது மனது வலிக்கின்றது என்றும் வேறு ஒரு நல்ல தமிழ் பற்றாளரை வைத்து வெளியிட்டிருக்கலாம் என்று கமெண்ட் செய்திருந்தார்

ஒதற்கு பதிலடி கொடுத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், ‘தமிழனாகிய எனக்கு அந்த பிரச்சனையில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஒசாமா பின்லேடன் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தால் அவர் நடிக்க கூடாதா? உங்கள் நாட்டில் உங்களை ஆள்பவர் எல்லோருமே மேலிருந்து கீழ் வரை இழி காரியங்களைத் தொடர்ந்து செய்பவர்கள். ஆனால் நீங்கள் சகித்துக் கொண்டுதானே வாழ்கிறீர்கள். உங்களுக்கு வசதியானவற்றை விட்டுக்கொடுக்கும் சுயநலம், பிறரை மட்டும் தாக்கும் பொதுநலம் சரியா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.