பிக்பாஸிற்கு சென்று இந்த பழக்கத்திற்கு அடிமையானேன்....!நடிகை குறித்து ஜேம்ஸ் வசந்தன் ஓபன் டாக்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று புகைப்பழக்கத்திற்கு அடிமையானதாக நடிகை கூறிய விஷயத்தை, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி நான்கு வருடங்கள் மற்றும் நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளது. பிக்பாஸ்-க்கு சென்றால் மிகவும் பிரபலமாகி விடலாம், புகழடையலாம் என்பதற்காகவே அந்த வாய்ப்பிற்காக காத்திருக்கும் பிரபலங்கள் ஏராளமானோர் உள்ளனர்.
பிக்பாஸில் 100 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருப்பதால், உள்ளே மன அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கும். போட்டியாளர்களுக்கிடையே பல சண்டைகளும் ஏற்படும். அப்போது ஸ்மோக்கிங் ரூம்-ஐ பயன்படுத்திக் கொள்வார்கள். சிலர் புகைக்கும் பழக்கமுடையவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அங்கு எடுக்கப்படும் வீடியோக்களை டெலிகாஸ்ட் செய்ய மாட்டார்கள். அந்த வகையில் பிக்பாஸ் சென்றுவந்த இளம் நடிகை ஒருவர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அவரை அண்மையில் சந்தித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் இதுகுறித்து பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
"பிரபலமான அந்த திரைப்படக் கலைஞரான இளம்பெண்ணும் நானும் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். ஓட்டலில் இருந்து அந்த நிகழ்ச்சி இடத்துக்குச் செல்லும் வழியில் டீ குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். மற்றவர்கள் டீ குடிக்கச் சென்றார்கள்.
அவள் டீ குடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு, என்னிடம் கொஞ்சம் தயங்கியபடியே, "தயவுசெய்து தப்ப நெனச்சிக்காதிங்க.. நான் கொஞ்சம் அந்தப் பக்க்கம் போயி.." என்று கையில் இருந்த சிகரெட்டைக் காண்பித்துக் கெஞ்சுவது போல கண்ணாலேயே சைகை செய்தாள்.
நான் "ஹேய்.. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல.."; என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
புகையாற்றி, கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்த அவள் "Soooooory.." என்று நெளிந்தாள்.
"எதுக்கு?" என்றேன்.
"Shock இல்ல.. bit surprised. Didnt know that you smoke"என்றேன்.
எல்லாம் இந்த Bigg Boss-னால வந்தது. அந்த வீட்டுக்குள்ளப் போயிட்டு யாராவது சிகரெட் பிடிக்காம வெளிய வரமுடியுமா? என்றாள்.
அப்படியா? என்று ஆச்சரியப்பட்டேன்.
ஆமா. அங்கருக்க டென்ஷன்.. பிரஷ்ஷருக்கு இது ஒண்ணுதான் outlet. பாக்கெட் பாக்கெட்டா கிடைக்கும்
இதுக்கு முன்னாடி நீ ஸ்மோக் பண்ணதுல்ல?
நோ.. நெவர்!.. அந்த inclination கூட கெடயாது. பாவம்.. எங்கம்மாவுக்குத் தெரியாது
என்று அந்த இளம்பெண் பேசியதை ஷேர் செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments