நீ எப்படிடா இப்படி வளந்த..? ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று கூறிய ஒரே ஒரு வார்த்தையால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நீ எப்படிடா இப்படி வளந்த..? என்று பிரபலம் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது தனது கருத்தையும் விமர்சனத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருபவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது எவிக்ட் ஆன போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் நிலையில் பாலாஜி உள்பட இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற போட்டியாளர்கள் வெளியில் தங்களுடைய பெயர் எப்படி இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். அவர்கள் சொன்னதை நினைத்து தூங்காமல் வருத்தப்பட்டு புலம்பி கொண்டிருக்கும் போட்டியாளர்களும் உண்டு. ஆனால் ஆரியோ, யாரிடமும் எதுவும் கேட்காமல், ஒருசிலர் தாங்களாகவே சொல்ல வந்தாலும் அவர்களை தடுத்துவிடும் ஆரியின் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகரித்து வருவதை தவிர்க்க முடியவில்லை.
இந்த நிலையில் ஆரியின் இந்த குணம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
இவனப்பத்தி எழுதுனது போதும்னு நெனச்சாலும் விடமாட்டேங்குறானே! வெளியேறிய Housemates எல்லாரும் உள்ள வந்துட்டாங்க. பாலாவுக்கு இருப்புகொள்ளல. எல்லார்கிட்டாயும் ஒக்காந்து ஒக்காந்து கேக்குறாரு.. "வெளிய என்னப்பத்தி என்ன நெனக்கிறாங்க.. positive-ஆ negative-ஆ.. பேரு ரொம்ப கெட்டுப்போச்சா.. ஆரியப்பத்தி என்ன சொல்றாங்க?" அப்படின்னு தவிக்கிறாரு.
அந்தப் பாசக்குடும்பத்தப் பத்தி சொல்லவே வேணாம். நமக்கு எதுவும் காட்டப்படல. ஆனா அத எப்ப எப்படி தன்னோட பிள்ளைகளுக்குச் சொல்லணும்னு நல்லதங்காளுக்காத் தெரியாது? எல்லாம் சொல்லிருக்கும்.
இந்த மனுஷன் அமைதியா ஒக்காந்துருக்கான். எதப்பத்தியும் கவலப்படல. அதை சொல்லத்தொடங்குன நிஷாவையும், "எனக்கு எதுவும் சொல்லவேணாம். நல்லதும் வேணாம், கெட்டதும் வேணாம். அது எனக்கும் நல்லதுல்ல.. மத்தவங்களுக்கும் நியாயமா இருக்காது" அப்படின்னுட்டான். நீ எப்படிடா இப்படி வளந்த..?
ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவு தற்போது ஆரி ஆர்மியினர்களால் வைரலாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com