திடீர் ஓய்வை அறிவித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பாட்டிசன்(31) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இவர் ஐபிஎல் 2020 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடத் தொடங்கிய ஜேம்ஸ் பாட்டிசன் இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 15 ஒருநாள் போட்டிகளில் கலந்துகொண்ட இவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் 4 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிற்காக களமிறங்கியுள்ளார்.
இறுதியாக சிட்னியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து காயம் காரணமாக உள்ளூர் போட்டிகள் எதிலும் விளையாடாமல் இருந்தார். இதனால் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ஆஷஸ் தொடரில் இவரது பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இனி பங்குபெற போவதில்லை என்று ஜேம்ஸ் பாட்டிசன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2013 ஆம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய இவர் 2020 ஆம் ஆண்டு இலங்கை வீரர் மலிங்காவின் ஒய்வை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்தார். பின்பு நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் தனது ஓய்வு குறித்துபேசிய ஜேம்ஸ் பாட்டிசன் “தான் 100% உடற்தகுதியுடன் இல்லை என்றும் இதனால் அணிக்கு முழுமையான பங்களிப்பை செலுத்த முடியாது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் என்னால் சரியாக செயல்பட முடியவில்லை. இன்னும் 3 அல்லது 4 வருடங்கள் கிரிக்கெட்டில் விளையாட முடியும். எனவே உள்ளூர் மற்றும் விக்டோரியா போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளேன். மேலும் பல இளம் வீரர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவேன்“ என்றும் தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் பாட்டிசன் ஓய்வை குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அவரது ரசிகர்கள் வருத்தம் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments