கிளாஸ்ரூம்ல எதுக்குடா ஜாதி கொண்டு வர்றீங்க.. 'சீரன்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,September 20 2023]

ஜேம்ஸ் கார்த்திக், இனியா, சோனியா அகர்வால், ஆஜித் உள்ளிட்டோர் நடித்த ’சீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது.

பள்ளி மாணவர்கள் மத்தியில் ஜாதி பிரச்சனை எந்த அளவுக்கு கொடூரமாக உள்ளது என்ற உண்மை கதையின் அடிப்படையில் இந்த படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. இந்த படத்தை துரை கே முருகன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் நாயகன் ஜேம்ஸ் கார்த்தி, கதை, திரைக்கதை வசனம் எழுதியதோடு இந்த படத்தை தயாரித்தும் உள்ளார்.

இந்த படத்தின் டிரைலரில் பள்ளி வகுப்புகளில் மேல் ஜாதி, கீழ் ஜாதி மாணவர்கள் இடையே நடக்கும் பிரச்சனை, கீழ் ஜாதி மாணவர்களுக்கு ஏற்படும் அவமானங்கள், பள்ளி நிர்வாகிகளே கீழ் ஜாதி மாணவர்களை அவமதிக்கும் செயல்கள் ஆகியவை தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளன.

சமீபத்தில் கூட மாணவர்கள் மத்தியில் ஜாதி பிரச்சனை இருந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்த நிலையில் இந்த படம் இப்போது வெளியாக இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மாணவர்கள் மத்தியில் ஜாதி வேற்றுமை இருக்கக் கூடாது என்பதை அழுத்தமாக சொல்லும் இந்த படம் என் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

சாதிவெறியை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்: பத்திரிகையாளர் சந்திப்பில் 'சீரன்' இயக்குனர்..!

நெட்கோ ஸ்டுடியோ சார்பில் ஜேம்ஸ் கார்த்திக், நியாஸ் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராஜேஷ் M அவர்களின் அசோசியேட்  இயக்குநர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால்,

ஐந்தே படங்கள்.. அட்லிக்கு திறந்தது அம்பானி வீட்டு கதவு..!

ஐந்தே படங்கள் மட்டும் இயக்கிய இயக்குனர் அட்லி தற்போது அகில இந்திய அளவில் புகழ் பெற்றுள்ள நிலையில் பிரபல தொழிலதிபர் அம்பானியின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பது கோலிவுட்

கட்டி அணைத்து ஒரு முத்தம்.. ஆட்டம் பாட்டு கொண்டாட்டம்.. நயனின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்ட நிலையில் அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வைரலானது என்பதை பார்த்தோம்.

'தளபதி 68' படத்தின் வில்லன் இந்த பிரபலமா? வேற லெவலில் யோசிக்கும் வெங்கட் பிரபு..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ஆன 'தளபதி 68' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள்

ஜிவி பிரகாஷின் 'அடியே' .. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடியில்?

ஜிவி பிரகாஷ் நடித்த 'அடியே' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை  நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.