பிரபல ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் காலமானார்.
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜேம்ஸ்பாண்ட் படங்கள் என்றாலே குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர்களில் நடிக்கும் நடிகர்கள் புகழின் உச்சத்தை அடைவார்கள் என்பது உறுதி. அந்த வகையில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர்களில் ஒருவரான ரோஜர்மூர் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 89.
Live and Let Die, The Man with the Golden Gun, The Spy Who Loved Me, Moonraker, For Your Eyes Only போன்ற பல படங்களில் ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர்களில் ரோஜர்மூர் நடித்துள்ளார். இவர் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்த அனைத்து படங்களும் உலக அளவில் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் தவிர மற்ற ஆக்சன் படங்களிலும் நடித்துள்ள இவர் பல விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனளிக்காமல் சுவிட்சர்லாந்து நாட்டில் ரோஜர்மூர் காலமானார். இவருடைய மறைவை இவரது உறவினர்கள் டுவிட்டர் மூலம் உறுதி செய்துள்ளனர். மேலும் இவரது இறுதிச்சடங்கு மோனாகோவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments