ரத்தம் சொட்ட சொட்ட பந்துவீசும் இங்கிலாந்து வீரர்… மிரண்டுபோன ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஏற்கனவே மழைபெய்து கிரிக்கெட் பிட்ச் நனைந்திருப்பதால் நாசூக்காக பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதனால் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி ஆரம்பம் முதலே படு சொதப்பலாக விளையாடி ரோஹித் 11 ரன்களுக்கும் லோகேஷ் ராகுல் 17 ரன்களுக்கும் புஜாரா 4 ரன்களுக்கும் ஜடேஜா 10 ரன்களுக்கும் அவுட்டாகினர். இந்நிலையில் கேப்டன் கோலி அரைசதம் எடுத்தார். ஆனால் அவரும் அவுட்டாகி பின்னர் துணை கேப்டன் ராஹானே 14 ரன்களுக்கும் ரிஷப் பண்ட் 9 ரன்களுக்கும் அவுட்டாகினர்.
இந்த நிலைமையில்தான் ஷாதுல் தாகூர், உமேஷ் யாதவ் ஜோடி கூட்டணி வைத்து 63 ரன்களை குவித்தனர். இதனால் 130 ரன்களுக்கு சுருண்டிருக்க வேண்டிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிக்கு இடையே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் செய்த ஒரு செயல் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்து அணியின் மூத்த வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இந்தியாவுடன் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே அடிப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் முதல் மேட்ஸில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதற்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததுதான் என்றும் கருதப்பட்டது. இதனால் ஜேம்ஸ் ஆண்டர்சனை தொடர்ந்து விளையாடுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் குழு கேட்டுக்கொண்டதாகவும் இதனால் 39 வயதாகும் ஆண்டர்சன் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் மேட்ச்களில் விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏற்கனவே வலது காலில் அடிப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு நேற்றைய போட்டியின் 42 ஆவது ஓவரில் ரத்தம் சொட்ட துவங்கியது. இதை இந்திய வீரர்கள் உட்பட பலரும் வியந்து பார்த்துக் கொண்டிருக்க அந்தக் காயத்திற்கு எந்த டிரெஸ்ஸிங்கோ அல்லது வேறு சப்டியூசனையோ வைத்துக்கொள்ளாத ஆண்டர்சன் தொடர்ந்து அதே காயத்துடன் நேற்று முழுக்க விளையாடி இருக்கிறார். இதைப் பார்த்து மிரண்டு போன வீரர்கள் பலர் ஆண்டர்சனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் “என்ன ஒரு டெடிகேஷன்“ என்று ஆண்டர்சனை வியந்து பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com