ராமனுக்கு சீதை போல எனக்குன்னு வந்தா என் ஜெகதாம்பா.. 'ஜமா' டிரைலர்..!

  • IndiaGlitz, [Tuesday,July 30 2024]

வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி ‘ஜமா’ என்ற திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

பாரி இளவழகன், அம்மு அபிராமி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ’கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் அண்ட் டீச் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. கூத்து கலைஞரான பாரி இளவழகன் , பெண்மை தன்மையுடன் இருக்கும் நிலையில் அவருக்கு யாரும் கல்யாணத்திற்கு பெண் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

இந்த நிலையில் அம்மு அபிராமியுடன் ஏற்பட்ட காதல், அந்த காதலால் ஏற்படும் பிரச்சனைகள், அதன் பின் ஏற்படும் மோதல், அதன் முடிவு என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது சுமார் மூன்று நிமிட ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

இந்த படத்தில் பாரி இளவழகன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதோடு இயக்கியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சேட்டன், அம்மு அபிராமி, மணிமேகலை, வசந்த் மாரிமுத்து, சாரதி கிருஷ்ணன் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையமைத்து இந்த படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஏற்கனவே பத்திரிகையாளர் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் ரசிகர்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.