இனி நாங்கள் இந்தியர் இல்லை. மெரினாவில் தூக்கி எறியப்பட்ட ஆதார் அட்டைகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்க போராடி வரும் இளைஞர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவங்கள் நிரூபணம் செய்து வருகிறது.
இன்று தமிழக முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது ஜல்லிக்கட்டு பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதால் அவசர சட்டம் உள்ளிட்ட எந்த முக்கிய முடிவுகளும் உடனடியாக எடுக்க முடியாது என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்தது போராட்டக்காரர்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது
இதனால் பொறுமையை இழந்த இளைஞர்கள் இனிமேல் எங்களுக்கு இந்தியன் என்ற அடையாளம் தேவையில்லை, நாங்கள் இனி தமிழர் மட்டுமே என்று கோஷமிட்டனர். கோஷமிட்டது மட்டுமின்றி இந்திய அரசு வழங்கிய ஆதார் அட்டைகள், வாக்காளர் அட்டைகள் ஆகியவற்றை தூக்கி எறிந்தனர். இந்தியாவில் இதுவரை எந்த போராட்டத்திலும் அடையாள அட்டையை தூக்கியெறியாத நிலையில், அடையாள அட்டையை தூக்கியெறிந்த முதல் போராட்டமாக இந்த போராட்டம் கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments