இனி நாங்கள் இந்தியர் இல்லை. மெரினாவில் தூக்கி எறியப்பட்ட ஆதார் அட்டைகள்

  • IndiaGlitz, [Thursday,January 19 2017]

தமிழ் பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்க போராடி வரும் இளைஞர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவங்கள் நிரூபணம் செய்து வருகிறது.

இன்று தமிழக முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது ஜல்லிக்கட்டு பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதால் அவசர சட்டம் உள்ளிட்ட எந்த முக்கிய முடிவுகளும் உடனடியாக எடுக்க முடியாது என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்தது போராட்டக்காரர்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது

இதனால் பொறுமையை இழந்த இளைஞர்கள் இனிமேல் எங்களுக்கு இந்தியன் என்ற அடையாளம் தேவையில்லை, நாங்கள் இனி தமிழர் மட்டுமே என்று கோஷமிட்டனர். கோஷமிட்டது மட்டுமின்றி இந்திய அரசு வழங்கிய ஆதார் அட்டைகள், வாக்காளர் அட்டைகள் ஆகியவற்றை தூக்கி எறிந்தனர். இந்தியாவில் இதுவரை எந்த போராட்டத்திலும் அடையாள அட்டையை தூக்கியெறியாத நிலையில், அடையாள அட்டையை தூக்கியெறிந்த முதல் போராட்டமாக இந்த போராட்டம் கருதப்படுகிறது.

More News

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் தரத்தயார். பிரபல நடிகர்

ஜல்லிக்கட்டு நடத்த கோரியும், பீட்டா அமைப்பினை தடை செய்ய கோரியும் லட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் குவிந்துள்ளனர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம். ஏ.ஆர்.ரஹ்மான்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் நாளை ஒருநாள் மெளன அறவழி உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது. இந்த போராட்டத்தில் அனைத்து நடிகர்களும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு கலந்து கொள்ளவுள்ளனர்...

ஜல்லிக்கட்டுக்காக திமுகவை எதிர்க்க திட்டமா? அருள்நிதியின் அதிரடி பதில்

ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெற்றே தீரவேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதும்...

எங்களை நேரடியாக சந்தியுங்கள். பிரதமர் மோடிக்கு ஆர்ஜே பாலாஜி வேண்டுகோள்

சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அவசர சட்டம் இல்லை. கைவிரித்தார் மோடி

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.