ஜல்லிகட்டு வழக்கின் தீர்ப்பு எப்போது? சுப்ரீம் கோர்ட் தகவல்
- IndiaGlitz, [Thursday,January 12 2017]
தமிழகர்களின் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு நடத்த தடை சுப்ரீம்கோர்டி விதித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக இந்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக பொங்கலுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைத்தனர். தமிழக வழக்கறிஞர்களின் கோரிக்கைக்கு சற்றுமுன் பதிலளித்த சுப்ரீம் கோர்ட்" ஜல்லிக்கட்டுவழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என்றும் தற்போதுதான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதாகவும், பொங்கலுக்குள் தீர்ப்பு வழங்க வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த அறிவிப்பு காரணமாக இந்த வருடமும் ஜல்லிகட்டு நடப்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் இயற்றாவிட்டால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த உள்ளதாக பல அமைப்புகள் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.