மெரினாவில் மின்சாரம் கட். செல்போன் ஒளியில் தொடரும் போராட்டம்

  • IndiaGlitz, [Tuesday,January 17 2017]

மக்கள் சக்தி குறிப்பாக இளைஞர்கள் சக்தி ஒன்றிணைந்து விட்டால் அதை அடக்க யாராலும் முடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நேரம் ஆக ஆக எழுச்சியுற்று வருவதை பார்த்து கொண்டிருக்கின்றோம். முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என்பதில் இளைஞர்கள் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தின் வீரியத்தை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்த அரசு, தற்போது மெரினா பகுதியில் மின்சாரத்தை துண்டித்துள்ளது. எனினும் நமது எழுச்சியுள்ள இளைஞர்கள் செல்போன் விளக்கொளியில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் வெற்றி பெற்று தமிழர்களின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் எண்ணமாக உள்ளது.