அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா? மதுரையில் முதல்வர் ஆலோசனை

  • IndiaGlitz, [Sunday,January 22 2017]

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றப்பட்டு இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தமிழக சார்பில் கூறப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களே தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. இதற்காக முதல்வர் தற்போது மதுரை சென்றுள்ளார்.

ஆனாலும் சென்னை மெரீனா, அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் போராடி வரும் போராட்டக்காரர்கள் ஜல்லிக்கட்டு நடத்த மறுப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டகாரர்கள் தங்களுக்கு ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் தேவையில்லை என்றும், நிரந்தர தீர்வு மட்டுமே வேண்டும் என போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அலங்காநல்லூர் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் வகையில் காவல் துறையினர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. அதுமட்டுமின்றி அலங்காநல்லூர் வரும் அனைத்து வழியையும் போராட்டக்காரர்கள் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தி அடைத்து வைத்துள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகவே உள்ளது.

மேலும் இதுகுறித்து மதுரையில் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

சூர்யாவின் 'சி 3' படத்தின் ரன்னிங் டைம்

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி 3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது...

தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள். கவர்னர் பதவியை ஏற்க தயார். முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி

தமிழக இளைஞர்களின் எழுச்சி காரணமாக ஜல்லிகட்டுக்கான அவசர சட்டம் இயற்றப்பட்டு நாளை வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

பீட்டாவுக்கு தமிழக அரசு தடை. வரவு - செலவு கணக்கை ஆய்வு செய்கிறது மத்திய அரசு

டா என்ற அமைப்பால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு நாளை வெகுசிறப்பாக தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள நிலையில் தற்போது பீட்டாவுக்கே தமிழக அரசு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இளைஞர்கள் போராட்டம் வெற்றி. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு

தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரு தலைவன் இல்லாத, தலைமை இல்லாத, தன்னலம் இல்லாத போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.

த்ரிஷாவுக்கு பீட்டா தரப்பில் இருந்தும் நெருக்கடியா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் த்ரிஷா பீட்டாவின் ஆதரவாளர் என்றும், அதன் உறுப்பினர் என்றும் கூறப்பட்டதால் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் தான் ஜல்லிக்கட்டுக்கு எந்தவிதத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் பீட்டாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் த்ரிஷா விளக்கம&