அடுத்த வார தலைவர் போட்டியில் ஜூலி: அதிர்ச்சியில் நேயர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தலைவருக்கான போட்டி நடைபெற்று அதில் வெற்றி பெறுபவர் தலைவராக நியமனம் செய்யப்படுவது வழக்கம். இதுவரை சினேகன், காயத்ரி, கணேஷ், வாசு, மீண்டும் சினேகன் ஆகியோர் தலைவர்களாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் அடுத்த வார தலைவர் போட்டியில் தான் போட்டியிடவுள்ளதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் ஜூலி.
இன்றைய புரமோ வீடியோவில், 'வந்த நாளில் இருந்து அழுக்காச்சி மூஞ்சியாக இருந்து வர்றேன். ஆனால் அது நான் இல்லை, நான் வேற! என்று கூறும் ஜூலி அடுத்த வார தலைவர் போட்டியில் நான் நிற்பேன்' என்று சினேகனிடம் கூறுகிறார். இதைக்கேட்டு சினேகன் தலையில் கைவைத்து குனிந்து கொள்கிறார். ஜூலி அடுத்த வாரம் தலைவர் போட்டியில் நின்று வெற்றி பெறுவாரா? இதனால் பிரச்சனைகள் இன்னும் பெரிதாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com