போலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காநலலூர். ஜல்லிக்கட்டு கிராமங்களில் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,January 13 2017]

மதுரை அருகே உள்ள அலங்காநல்லூரில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை பார்க்க உலகின் பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பீட்டா தொடுத்த வழக்கின் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. மத்திய அரசும் அவசர சட்டம் இயற்ற மறுத்து வருவதால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது சந்தேகமாக உள்ளது.
இந்நிலையில் பொறுமை இழந்த தமிழர்கள் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை தடையை மீறி நடத்த முடிவு செய்துள்ளனர். ஒருசில இடங்களில் நேற்றில் இருந்தே ஜல்லிக்கட்டுக்கள் நடைபெற்று வருகிறது.
ஆனால் அதே நேரத்தில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்துவிடாமல் தடுப்பதில் காவல்துறையினர் தீவிரமாக உள்ளனர். அலங்நல்லூர், பாலமேட்டு பகுதிகளில் ஜல்லிகட்டு நடைபெறும் வாடிவாசல்களை போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறியபோது, 'ஜல்லிக்கட்டுக்கு காளைகளை அனுப்ப மாட்டோம் என உரிமையாளர்களை அழைத்து உறுதிமொழி வாங்கத் திட்டமிட்டுள்ளோம். பொங்கலையொட்டி காளைகளை அலங்கரித்து கோயிலுக்கு அழைத்து செல்லவும், கிராமத்து தெருக்களில் ஓடவிடவும் தடை இல்லை. அதேநேரம், ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை. அலங்காநல்லூர் பகுதியிலுள்ள 235 காளைகள் எங்கள் கண்காணிப்பில் உள்ளன. அரசின் ஆதரவு இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம் என விழா கமிட்டியினர் உறுதியளித்துள்ளனர். தனித்தனியாக காளைகளை அவிழ்த்துவிடும் வழக்கம் இப்பகுதியில் இல்லை' என்று கூறினர்.

More News

டி.எம்.செளந்திரராஜனுக்கு மத்திய அரசு செய்த கெளரவம்

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், நாகேஷ், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்தியராஜ் உள்பட மூன்று தலைமுறை நடிகர்களுக்கு தனது காந்தக்குரலால் ஏராளமான பாடல்களை பாடிய பிரபல பாடகர் டி.எம்.செளந்திரராஜன் நினைவாக மத்திய அரசு ரூ.5 மதிப்பில் தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முடிஞ்சா குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வாங்க..சீமான்

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்

சசிகலாவுடன் பாரதிராஜா, பாக்யராஜ் உள்பட திரையுலக பிரபலங்கள் சந்திப்பு

புரட்சி தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கு தமிழ்நாடு திரைப்படத்துறை திட்டமிட்டுள்ளது

முதல்நாள் வசூலில் 'கபாலி', 'தெறி'யை அடுத்து சாதனை படைத்த 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

நயன்தாராவுடன் நடிப்பது உண்மையா? விஷால் விளக்கம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதை தவிர்த்துவிட்டு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.