மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு குவியும் ஆதரவு. இளைஞர்கள் எழுச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் கைதானவர்களை விடுவிக்க கோரியும் இன்று காலை குறைந்த எண்ணிக்கையுள்ள இளைஞர்களால் தொடங்கப்பட்ட மெரினா போராட்டம் நேரம் ஆக ஆக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகளால் தற்போது மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் அளவுக்கு கூட்டம் பெருகி உள்ளது.
எந்தவித அரசியல் கட்சியின் அழைப்பின்றி தமிழ் உணர்வோடு குவிந்திருக்கும் இந்த கூட்டத்தால் தமிழினமே பெருமை கொள்கிறது. குறிப்பாக எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் நெருங்க விடாமல் முழுக்க முழுக்க இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் இளைஞர்களை சந்திக்க அவ்வப்போது திரையுலகினர்கள் வந்து வாழ்த்து தெரிவித்து செல்கின்றனர். இயக்குனர் டி. ராஜேந்தர், நடிகர் மயில்சாமி, இயக்குனர் தங்கர்பச்சான், திருமுருகன், பாடலாசிரியர் சினேகன் உள்பட திரையுலகினர் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். முதல்வர் பன்னீர் செல்வம் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும் என்றும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இளைஞர்கள் கோரிக்கையுடன் இந்த போராட்டம் தொடரந்து கொண்டிருக்கின்றது.
அரசியல் வாடை இன்றி, தமிழ் கலாச்சாரத்தை காப்பது ஒன்றையே நோக்கமாக கொண்டு நடைபெறும் இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் பீட்டாவை இந்தியாவை விட்டு விரட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com