மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு குவியும் ஆதரவு. இளைஞர்கள் எழுச்சி

  • IndiaGlitz, [Wednesday,January 18 2017]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் கைதானவர்களை விடுவிக்க கோரியும் இன்று காலை குறைந்த எண்ணிக்கையுள்ள இளைஞர்களால் தொடங்கப்பட்ட மெரினா போராட்டம் நேரம் ஆக ஆக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகளால் தற்போது மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் அளவுக்கு கூட்டம் பெருகி உள்ளது.

எந்தவித அரசியல் கட்சியின் அழைப்பின்றி தமிழ் உணர்வோடு குவிந்திருக்கும் இந்த கூட்டத்தால் தமிழினமே பெருமை கொள்கிறது. குறிப்பாக எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் நெருங்க விடாமல் முழுக்க முழுக்க இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் இளைஞர்களை சந்திக்க அவ்வப்போது திரையுலகினர்கள் வந்து வாழ்த்து தெரிவித்து செல்கின்றனர். இயக்குனர் டி. ராஜேந்தர், நடிகர் மயில்சாமி, இயக்குனர் தங்கர்பச்சான், திருமுருகன், பாடலாசிரியர் சினேகன் உள்பட திரையுலகினர் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். முதல்வர் பன்னீர் செல்வம் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும் என்றும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இளைஞர்கள் கோரிக்கையுடன் இந்த போராட்டம் தொடரந்து கொண்டிருக்கின்றது.

அரசியல் வாடை இன்றி, தமிழ் கலாச்சாரத்தை காப்பது ஒன்றையே நோக்கமாக கொண்டு நடைபெறும் இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் பீட்டாவை இந்தியாவை விட்டு விரட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

More News

பீட்டாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். விஜய்யின் வீடியோ செய்தி

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில்...

தமிழன் போராடுவது எதற்காக? ராகவா லாரன்ஸ் ஆவேச அறிக்கை

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

மெரினாவில் மின்சாரம் கட். செல்போன் ஒளியில் தொடரும் போராட்டம்

மக்கள் சக்தி குறிப்பாக இளைஞர்கள் சக்தி ஒன்றிணைந்து விட்டால் அதை அடக்க யாராலும் முடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது...

நான் ஜல்லிக்கட்டு எதிரானவன் அல்ல. விஷால்

ஜல்லிகட்டு போராட்டம் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு புறம் பீட்டாவுக்கு எதிரான குரலும் வலுத்து வருகிறது. இந்நிலையில் பீட்டாவுக்கு ஆதரவு அளித்த திரையுலகினர் மீது கடுமையான விமர்சனம் பாய்ந்து வருகிறது...

நீதிமன்றத்தில் வெற்றி, மக்கள் மன்றத்தில் தோல்வி. பீட்டா குறித்து சூர்யா

ஜல்லிக்கட்டு நடத்த தமிழகம் முழுவதும் உணர்ச்சிபூர்வமான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது...