காணாமல் போன கொரனோ நோயாளி: ஒரு வாரம் கழித்து கழிவறையில் கண்டுபிடித்ததால் அதிர்ச்சி
- IndiaGlitz, [Thursday,June 18 2020]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென காணாமல் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஒரு வாரம் கழித்து அந்த நோயாளியின் இறந்த உடல் கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 82 வயது கொரனோ நோயாளி ஒருவர் அம்மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் காணாமல் போனார். அவரை கண்டுபிடிக்க மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர முயற்சி எடுத்தனர்.
இந்த நிலையில் எட்டு நாட்கள் கழித்து அவரது உடல் அதே மருத்துவமனையில் உள்ள கழிவறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் இறந்து 8 நாட்கள் ஆகிவிட்டது உறுதி செய்யப்பட்டதால் பிணமாகவே அவர் 8 நாட்கள் கழிவறையில் இருந்துள்ளது அதிர்ச்சியை வரவழைத்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாநில அரசு கவனக்குறைவாக இருந்த ஐந்து சீனியர் மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்தது. அதுமட்டுமின்றி அந்த மருத்துவமனை இருக்கும் பகுதியில் கலெக்டராக பணிபுரிந்தவரும் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
82 வயது குழந்தை நோயாளி ஒருவர் கழிவறையில் இறந்துபோனதை ஒரு வாரம் கவனிக்காமல் இருக்கும் அளவிற்கு அந்த மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் கவனக்குறைவாக பணி செய்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.