மோடியை திருமணம் செய்ய போராட்டம் நடத்தும் 40 வயது பெண்
- IndiaGlitz, [Saturday,October 07 2017]
பிரதமர் மோடி தனியாக இருக்கின்றார். எனவே அவரை திருமணம் செய்து நன்றாக பார்த்து கொள்வேன். மோடி தன்னை வந்து சந்திக்கும் வரை போராட்டத்தை தொடர்வேன் என்று ராஜஸ்தான் மாநிலத்தில் 40 வயது பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 8-ம் தேதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓம் சாந்தி சர்மா என்ற 40 வயது பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 20 வயதில் ஒரு மகள் உள்ளார். பின்னர் திருமண முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் பிரதமர் மோடியை திருமணம் செய்ய வேண்டி மோடியின் புகைப்படத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்செயலாக பத்திரிகையாளர் ஒருவர் இந்த போராட்டம் எதற்கு என்று கேட்டதால் தற்போது இந்த போராட்டத்தின் நோக்கம் தெரிய வந்துள்ளது.
இந்த போராட்டம் குறித்து போராட்டம் நடத்தி வரும் ஓம்சாந்தி சர்மா கூறியபோது, 'எனது முதல் திருமணம் முறிவைச் சந்தித்த பின்னர் என்னைத் திருமணம் செய்ய ஏராளமானோர் முன்வந்தனர். ஆனால் நான் பிரதமர் மோடியைத் திருமணம் செய்ய விரும்புகிறேன். பிரதமர் தனியாக இருக்கிறார். அவருக்கு நான் சேவை செய்ய விரும்புகிறேன். அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி தர மறுக்கின்றனர். நான் ஏதோ பேராசைப்படுவதாக மக்கள் என்னைப் பார்த்து சிரிக்கின்றனர். எனக்கு ஏராளமான நில புலன்கள் இருக்கின்றன. அதையெல்லாம் விற்று, மோடியை நான் பார்த்துக்கொள்வேன். பிரதமர் என்னை வந்து சந்திக்கும் வரை ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும் ''என்று கூறியுள்ளார்.